முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.ஐ.பி. டிக்கெட்டுகளைத் தியாகம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      விளையாட்டு
Pak 2024 11 13

Source: provided

கராச்சி : இந்தியா - பாகிஸ்தான் அணிள் மோதும் போட்டியின் வி.ஐ.பி.  டிக்கெட்களை பி.சி.பி.  தலைவர் மோஷின் நக்வி தியாகம் செய்துள்ளார்.

இன்று தொடங்குகிறது...

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது.

வி.ஐ.பி.  டிக்கெட்...

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி தன்னுடைய வி.ஐ.பி.  டிக்கெட்டை ரூ.94 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். மேலும், தனக்கான போட்டிகளை சாதாரண ஸ்டாண்டில் இருந்து பார்ப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான மோஷின் நக்விக்கு வி.ஐ.பி.  ஸ்டாண்டில் 30 இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இந்த இருக்கைக்கான டிக்கெட்டுகளை 4 லட்சம் திர்ஹாம்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.94 லட்சம்) விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும், இந்தப் பணத்தை பி.சி.பி. யின் நிதியாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார்.

சாதாரண இருக்கையில்...

இதுகுறித்து பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் கூறுகையில், “மோஷின் நக்வி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு வி.ஐ.பி.  பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் அவர் சாதாரண இருக்கைகளில் ரசிகர்களுடன் இருந்து போட்டியை ரசிக்க விரும்புகிறார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் நடத்தும் மிகப்பெரிய ஐ.சி.சி.  போட்டி என்பதால் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து