முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் பெண் மருத்துவர் வன்கொடுமை வழக்கில் சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      தமிழகம்
Jail 2024-10-04

வேலூர், வேலூரில் பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் பெண் மருத்துவர் ஒருவர், அவரது நண்பருடன் சேர்ந்து திரையரங்குக்கு சென்றுவிட்டு, மருத்துவமனைக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், இருவரையும் 5 பேர் சேர்ந்து கடத்தினர். மேலும், கத்தி முனையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவர்களிடமிருந்த 2 பவுன் தங்க நகையையும், ரூ. 40,000 பணத்தையும் பறித்து சென்றனர்.

இருப்பினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய பெண் மருத்துவர், இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இருந்தபோதிலும், ஓரிரு நாள்களில் காவல் துறைக்கு மின்னஞ்சல் மூலம் பெண் புகார் அளித்தார். இந்த வழக்கில் கைதான 5 பேரில் ஓர் இளஞ்சிறாரைத் தவிர்த்து பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகிய நால்வரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கின் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, கூடுதல் மகளிர் நீதிமன்றத்திலிருந்து விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகிய நால்வருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கில் கைதான இளஞ்சிறாருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை விவரம் நேற்று வெளியிடப்பட்டது. போக்சோ நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் பிறப்பித்த உத்தரவில், சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து