எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியும் நேற்று (பிப்.19) பொறுப்பேற்றனர்.
தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜிவ் குமார் நேற்று முன்தினம் (பிப். 18) ஓய்வு பெற்றதை அடுத்து, தேர்தல் ஆணையராக இருந்து வந்த ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நேற்று பொறுப்பேற்றார். புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவேக் ஜோஷியும் நேற்று பொறுப்பேற்றார்.
தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு ஞானேஷ் குமார் வெளியிட்ட முதல் செய்தியில், "தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதல் பணி வாக்களிப்பது. எனவே, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும், எப்போதும் வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமை தேர்தல் ஆணையர்:
தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரும் தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு டெல்லியில் கடந்த 3 தினங்களுக்கு முன் இரவு கூடியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபம் தெரிவித்தார். தேர்வு குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகு முடிவு எடுக்கலாம் என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அரசாணையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் 6 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் வரை பதவியில் நீடிக்கலாம். இதன்படி புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வரும் 2029-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி வரை பதவியில் நீடிப்பார். இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 2027-ம் ஆண்டில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்கள் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்பார்வையில் நடைபெறும்.
தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி:
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்தில் புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதற்கு ராகுல் காந்தி ஆட்சேபம் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு புதிய தேர்தல் ஆணையரை நியமிக்கலாம் என்று அவர் கூறினார். எனினும் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா) முடிவின்படி ஹரியானா தலைமைச் செயலாளர் விவேக் ஜோஷி புதிய தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 1966-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி உத்தர பிரதேசத்தில் விவேக் ஜோஷி பிறந்தார். அவருக்கு தற்போது 58 வயதாகிறது. வரும் 2031-ம் ஆண்டு வரை அவர் பதவியில் நீடிப்பார். மற்றொரு தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சாந்து வரும் 2028-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். எனவே ஞானேஷ் குமாருக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியே பதவியேற்பார். வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அவரது மேற்பார்வையில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
யார் இந்த விவேக் ஜோஷி: கடந்த 1964-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி உத்தர பிரதேசத்தின் கான்பூரில் ஞானேஷ் குமார் பிறந்தார். கான்பூர் ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார். கடந்த 1988-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். கேரள பேட்ச் அதிகாரியான இவர் பல்வேறு மத்திய அரசு துறைகளில் பணியாற்றினார்.
கடந்த 2019-ம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளராக ஞானேஷ் குமார் பணியாற்றினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை நிறுவ ஞானேஷ் குமார் முக்கிய பங்கு வகித்தார். இறுதியாக கூட்டுறவுத் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு தேவையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
20 Feb 2025சென்னை: சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத
-
விரைவு ரயில்களின் இயக்க நாட்கள், நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே
20 Feb 2025சென்னை: விரைவு ரெயில்களின் இயக்க நாட்கள் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் மோதி விபத்து
20 Feb 2025அரிசோனா: அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
-
அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள்: வரும் 4-ம் தேதி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
20 Feb 2025தூத்துக்குடி: அய்யா வைகுண்டசாமி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
மோசடி சம்பவங்கள் எதிரொலி: ஒரு மாதத்தில் மட்டும் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
20 Feb 2025புதுடெல்லி: இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
-
பெண்களுக்கு மார்ச் 8-க்குள் ரூ.2,500: டெல்லி முதல்வர் ரேகா குப்தா உறுதி
20 Feb 2025புதுடில்லி: டில்லியில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.
-
அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்: துணை முதல்வர் உதயநிதிக்கு அண்ணாமலை எதிர் சவால்
20 Feb 2025சென்னை: அண்ணா சாலைக்கு தனியாக வர தயார் என்று உதயநிதி ஸ்டாலின் சவாலுக்கு அண்ணாமலை எதிர் சவால் விடுத்துள்ளார்.
-
இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்
20 Feb 2025சென்னை: தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்கு சொந்தமான ரூ. 10 கோடியிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ரூ.1,141 கோடியில் மேம்படுத்தப்பட்ட செய்யூர் - வந்தவாசி - போளூர் சாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Feb 2025சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1141.23 கோடி செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட 109 கிலோ மீட்டர் நீள செய்யூர் – வந்தவா
-
பறிபோன ஹாட்ரிக் வாய்ப்பு
20 Feb 2025கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் நேற்று (பிப்.
-
பொது இடங்களில் தலைவர்கள் சிலை: மதுரை ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
20 Feb 2025மதுரை: 'தலைவர்கள் சிலைகள், கட்சி கொடிக்கம்பங்களை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?' என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
-
ஜெ.பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு உதவுங்கள்: கட்சியினருக்கு அ.தி.மு.க. தலைமை வேண்டுகோள்
20 Feb 2025சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை, எளியோருக்கு உதவிடுமாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அ.தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்கள்: அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு
20 Feb 2025சென்னை: அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
20 Feb 2025மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
-
டெல்லி முதல்வர் மீது வழக்குகள்: தேர்தல் உரிமை அமைப்பு தகவல்
20 Feb 2025புதுடில்லி: டில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள் மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Feb 2025சென்னை: மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
320 ரன்களை எதிர்பார்க்கவில்லை: நியூசி. கேப்டன் ஆச்சர்யம்
20 Feb 2025கராச்சி: நாங்கள் 260 ரன்கள் அடிப்போம் என்று தான் நினைத்திருந்தோம்.
-
மாணவர் சங்கத் தலைவர் முதல் டெல்லி முதல்வர் வரை! யார் இந்த ரேகா குப்தா?
20 Feb 2025புதுடெல்லி: டெல்லியின் 9-வது முதல்வர், டெல்லியின் 4-வது பெண் முதல்வர் முதலான பெருமைகளை வசப்படுத்தும் 50 வயது ரேகா குப்தாவின் குடும்ப, அரசியல் பின்னணி தொடர்பான தேடல்கள்
-
ஜோ பைடன் இந்தியாவுக்கு 21 மி.டாலர் நிதியுதவி கொடுத்தது ஏன்? அதிபர் டிரம்ப் கேள்வி
20 Feb 2025மியாமி: பைடன் நிர்வாகம் எதற்காக இந்தியாவுக்கு 21 மில்லியன் அமெரிக்க டாலரை வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அளிக்க வேண்டும் என்று டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
2,152 கோடி ரூபாய் கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Feb 2025சென்னை: கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கான ரூ.2,152 கோடி நிதியினை உ
-
டெல்லி சபாநாயகர் பதவிக்கு விஜேந்தர் குப்தா பெயர் பரிந்துரை
20 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளராக விஜேந்தர் குப்தா பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
-
புதிய நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
20 Feb 2025சென்னை: ரூ.92.50 கோடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: மலேசியா தமிழருக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
20 Feb 2025சிங்கப்பூர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியா தமிழர் தூக்கு தண்டனை சிங்கப்பூர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
-
எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு
20 Feb 2025வாஷிங்டன்: இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால் அமெரிக்காவுக்கு அநீதியானது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
வங்காளதேச விமானம் நாக்பூரில் தரையிறக்கம்
20 Feb 2025நாக்பூர்: வங்காளதேசத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.