முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதானி மீதான ஊழல் புகார்: இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      இந்தியா
adani 2025-01-03

புதுடெல்லி, அதானி வழக்கில் அமெரிக்கா இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.

அதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி மீதான லஞ்ச ஊழல் புகார் வழக்கில் அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. இதுகுறித்து, தனது புகாரை அதானிக்கு வழங்கும் நடைமுறைக்காக இந்தியாவின் சட்ட அமைச்சகத்தின் உதவியை நாடி இருப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஒழுங்குமுறை ஆணையம், ஹேக் சேவை மாநாட்டு ஒப்பந்தத்தின் கீழ் உதவி கோரியுள்ளது" என்று தெரிவித்துள்ளது. என்றாலும் இதுகுறித்து அதானி குழுமமோ அல்லது சட்ட அமைச்சகமோ உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்கு சில நாட்களுக்கு பின்பு இந்த விவகாரம் வெளியாகியுள்ளது. தனது அமெரிக்கப் பயணத்தின் போது அதிபர் ட்ரம்புடன் அதானி விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இருநாடுகளின் தலைவர்களும் இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களை ஒருபோதும் விவாதிப்பதில்லை. என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கவுதம் அதானியின் ஊழலை, பிரதமர் மோடி மூடி மறைப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கதில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், “இதுகுறித்து இந்தியாவில் கேள்வி கேட்டால் அதற்கான பதில் மவுனமே. நீங்கள் வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அதற்கான பதில் தனிப்பட்ட விஷயம்!. அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை பிரதமர் மோடி மூடி மறைத்திருக்கிறார்.“ என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து