முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி : செல்வப்பெருந்தகை கண்டனம்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      தமிழகம்
Selvabaru 2023-02-19

Source: provided

சென்னை : தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் உள்ள நாகாலாந்து போன்ற சிறிய மாநிலம் விரும்பினாலும் கூட ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்று சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அனுப்புகிற கடித போக்குவரத்து அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டதோடு, இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்பட வாய்ப்பே இல்லாத நிலையில் சட்டத் திருத்தம் பாதுகாப்பு கேடயமாக அமைந்தது. இத்தகைய பின்னணியில் தான் மொழி பிரச்சினைக்கு அன்றைய காங்கிரஸ் அரசுகள் தீர்வு கண்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டு மக்கள் மீது தற்போது மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தி மொழியை திணிக்க பகிரங்கமாக முயற்சி செய்கிறது.

மும்மொழி திட்டத்தை திணிக்கிற தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும், இந்துத்வா கொள்கைகளை பரப்புகிற பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை திறக்க வேண்டும், இதை ஏற்கவில்லை என்றால் தமிழக கல்வித்துறைக்கு மத்திய பா.ஜ.க. அரசு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூபாய் 2152 கோடியை வழங்க முடியாது என்று ஆணவத்தோடு மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இதை கண்டிக்கிற வகையில் தான் மொழித் திணிப்பிற்கு எதிராக தி.மு.க. ஏற்பாடு செய்த கண்டன கூட்டத்தில் தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

தமிழ்நாடே மொழித் திணிப்பிற்கு எதிராக திரண்டு எழுகிற சூழலில் மும்மொழி திட்டத்திற்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. 90 நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்தப் போவதாக அண்ணாமலை அறிவித்திருக்கிறார். அண்ணாமலை அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்தியை திணிக்காமல் விட மாட்டோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. இத்தகைய அராஜக ஆணவப் போக்கிற்கு தமிழக மக்கள் நிச்சயம் உரிய பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து