முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2025      இந்தியா
Delhi-cm 2025-02-20

Source: provided

புதுடெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டெல்லி முதல்வராக ரேகா குப்தா நேற்று பதவியேற்று கொண்டார். இதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி  தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தா  அடிமட்டத்திலிருந்து உயர்ந்து, கல்லூரி வளாக அரசியல், மாநில அளவிலான கட்சிப் பொறுப்பு, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டு, இப்போது எம்.எல்.ஏ.வாகவும், முதல்வராகவும் உள்ளார். டெல்லியின் வளர்ச்சிக்காக அவர் முழு வீரியத்துடன் பாடுபடுவார் என்று நான் நம்புகிறேன். அவரது பதவிக்காலம் பலன் அளிக்க எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

இதேபோல்,   மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "வஞ்சகம் மற்றும் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு இலக்கணமாக விளங்கும் பா.ஜ.க.வை டெல்லி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். டெல்லியின் தாழ்த்தப்பட்டோர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக பிரதமர் மோடி உருவாக்கிய வளர்ந்த டெல்லி என்ற தொலைநோக்குப் பார்வை உங்கள் அனைவரின் திறமையான தலைமையின் கீழ் நிச்சயமாக நனவாகும். பா.ஜ.க. அரசு டெல்லியை தூய்மையான, அழகான மற்றும் வளமான நகரமாக மாற்றுவதன் மூலம் உலகின் சிறந்த தலைநகராக மாற்றும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சந்தீப் தீட்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க. தனது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து