முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதும் பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது

புதன்கிழமை, 5 மார்ச் 2025      தமிழகம்
10th-Exam 2023-04-06

Source: provided

சென்னை : தமிழகத்தில் 3 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதும் பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது.

பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 பேர் எழுதி வருகின்றனர். 

இதுதவிர தனித்தேர்வர்களாக 4 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 137 பேரும் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத் தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 470 பறக்கும் படைகளும், தேர்வுப் பணிகளில் 44 ஆயிரத்து 236 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து கண்காணிக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

முதல் நாளில் தமிழ் உள்பட இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடந்தது. நேற்று தொடங்கிய தேர்வு, வருகிற 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 முதல் 4 நாட்கள் வரை இடைவெளி விட்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து