முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகுஜன் சமாஜ் கட்சிப் பதவியிலிருந்து சகோதரரை நீக்கி மாயாவதி உத்தரவு

புதன்கிழமை, 5 மார்ச் 2025      இந்தியா
Mayavathi 2024-12-16

Source: provided

உத்தரப் பிரதேசம் : பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது சகோதரர் ஆனந்த் குமாரை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீண்ட காலமாக தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஆனந்த் குமார் சமீபத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். கட்சி மற்றும் இயக்கத்தின் நலனுக்காக ஒரு பதவியில் மட்டும் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. இந்த சூழ்நிலையில், ஆனந்த் குமார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய துணைத் தலைவராக இருக்கும்போது, எனது நேரடி வழிகாட்டுதலின் கீழ் முன்பு போலவே தனது பொறுப்புகளைச் செய்வார். ஆனந்த் குமாருக்கு பதிலாக உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் வசிக்கும் ரந்தீர் பெனிவாலுக்கு தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எம்பி ராம்ஜி கௌதம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் ரந்தீர் பெனிவால் இருவரும் எனது வழிகாட்டுதலின் கீழ் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பொறுப்புகளை நேரடியாகக் கையாளுவார்கள். இவர்கள் இருவரும் இணைந்து முழு நேர்மையுடன் பணியாற்றுவார்கள் என்று கட்சி நம்புகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சி பொருப்பிலிருந்து வெளியேற்றினார். இன்று தனது சகோதரரை வெளியேற்றியுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து