எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து த.வெ.க. போராடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி பாராளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026-ம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
தற்போதைய பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம். எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் “மாநிலங்களின் மக்கள் தொகை” என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை.
புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை. ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 80 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த வேறுபாடு மேலும் அதிகரிக்கக் கூடாது. தென் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாகத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
இந்நிலையில், புதிய நாளாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில் 888 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்தால் மத்திய அரசு பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நீண்டகாலத் திட்டத்தில் இருந்ததாகவே தெரிகிறது. அப்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஒருவேளை தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதுள்ள விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்தாலும் அதுவும் ஓர் உகந்த முன்னெடுப்பாக அமையாது.
ஏனென்றால், தற்போது 543 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்பொழுதே அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க அனுமதி கிடைப்பதில்லை; பாலட் முறையிலேயே கேள்வி கேட்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்படியே வாய்ப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் சில நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்?
பாராளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பை ஒன்றிய அரசு தன்னிச்சையாக முன்னெடுக்குமானால், அது தென் மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படும். ஒரு சில வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று, ஒன்றியத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற சூழ்நிலை உருவானால் அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்த மிக முக்கியமான தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
ரோகித்தின் கிரிக்கெட் பயணம் குறித்து கவுதம் காம்பீர் பதில்
05 Mar 2025துபாய் : இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் குறித்து காம்பீர் பதிலளித்துள்ளார்.
எதிர்காலம் என்ன?
-
சாதனைகளைவிட அணியின் வெற்றியே முக்கியம்: கோலி
05 Mar 2025துபாய் : சாதனைகளைவிட அணியின் வெற்றிதான் முக்கியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5-வது முறையாக....
-
ஓமர்சாய் ஆல்-ரவுண்டரில் முதலிடம்
05 Mar 2025சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா (மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது) ஆகியவற்றின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்தது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-03-2025.
06 Mar 2025 -
ஐ.சி.சி. ஒருநாள் தொடரில் 65 சிக்ஸர்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை
05 Mar 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் அதிக சிக்ஸர் விளாசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு
05 Mar 2025துபாய் : நடப்பு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது.
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை பட்டியல்: கோலி, ஷ்ரேயஸ் முன்னேற்றம்
05 Mar 2025துபாய் : ஐ.சி.சி.யின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.
-
ராஜீவ் காந்தி குறித்து மணிசங்கர் அய்யர் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
06 Mar 2025டெல்லி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மணிசங்கர் அய்யர் அடிக்கடி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்ளை தெரிவித்து சர்ச்ச
-
வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ.22.36 கோடி செலவில் 12 புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
06 Mar 2025சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.
-
ரூபாய் நோட்டில் உள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க தயக்கம் காட்டுவது ஏன்? மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
06 Mar 2025சென்னை: ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழிப்பீர்களா என்று எங்களைப் பார்த்து கேட்கும் அதிமேதாவிகளான உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம், ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள
-
சொந்தமான இடங்களில் வைத்துக்கொள்ளலாம்: சாலைகளில் உள்ள கட்சிக்கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை
06 Mar 2025மதுரை: சாலைகளில் கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ஐகோர்ட் கிளை உறுதி செய்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
06 Mar 2025சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
-
தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரி மத்திய அரசு பணிக்கு மாற்றம்
06 Mar 2025சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
கொலை வழக்கில் கைதானவர்: எட்டயபுரம் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கைதி சுட்டு பிடிப்பு
06 Mar 2025கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் போலீஸாரை தாக்கி விட்டு தப்பி ஓடும்போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
-
விரைவில் 4000 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி செழியன் தகவல்
06 Mar 2025ஈரோடு: விரைவில் 4000 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
-
மீனவர்களை தடுத்து நிறுத்துங்கள்: இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை
06 Mar 2025கொழும்பு: தங்கள் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் மீனவர்களை தடுக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
06 Mar 2025துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
-
இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் தகவல்
06 Mar 2025புதுடெல்லி: இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
-
மதுரையில் தென்மண்டல காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பங்கேற்பு
06 Mar 2025மதுரை: சட்டம், ஒழுங்கு மற்றும் பல்வேறு குற்றத்தடுப்பு குறித்து தென்மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.
-
அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
06 Mar 2025சென்னை: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
பத்து மொழிகளை ஊக்குவிக்க போகிறேன்: ஆந்திரா முதல்வர்
06 Mar 2025ஆந்திரா: ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-
ஒருவர் கூட பாதுகாப்பாக இருக்க முடியாது: ஹமாஸுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை
06 Mar 2025வாஷிங்டன்: மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கா விட்டால், ஒருவர்கூட பாதுகாப்பாக இருக்க முடியாது என்று ஹமாஸ் குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
-
வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: 12 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு
06 Mar 2025நெல்லை: வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.
-
ராணுவ உதவியை நிறுத்திய அமெரிக்கா: உக்ரைனுக்கு உதவ முன்வந்த பிரான்ஸ்
06 Mar 2025உக்ரைன்: உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் போர் முடிவுக்கு வரவில்லை.
-
தமிழகத்தில் 10-ம் தேதி முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
06 Mar 2025சென்னை: தமிழகத்தில் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.;