முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு - காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது: அமித்ஷா பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      இந்தியா
Amit-Shah 3

Source: provided

புதுடில்லி : உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த மாநிலங்களவையில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்த அமித் ஷா, 370-வது பிரிவை ரத்து செய்வதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களின் கனவை நரேந்திர மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. நாட்டில் இரண்டு தலைவர்கள், இரண்டு அரசியலமைப்புகள், இரண்டு கொடிகள் இருக்க முடியாது என்பது நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கனவு. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி ஆகியவை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 92 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இவற்றைச் சமாளிக்க எந்த அமைப்பும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை, ஆனால் மோடி அரசு அதைச் செய்தது. மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது.

பயங்கரவாத சம்பவங்களில் பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்வதில்லை. நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 2019-24 வரை சுமார் 40,000 அரசு வேலைகள் வழங்கப்பட்டன. 1.51 லட்சம் சுய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன, திறன் மேம்பாட்டுக் கழகங்கள் செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து