முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ஆம் ஆத்மி கட்சி தலைவராக பரத்வாஜ் நியமனம்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      இந்தியா
AAP 2024-10-08

Source: provided

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவின் புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் சௌரப் பரத்வாஜையும், பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளராக மணீஷ் சிசோடியாவையும் நியமித்து கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தலைநகரில் நடந்துமுடிந்த தில்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த நிலையில், பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஆட்சியை கைபற்றியது. அதேசமயம் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தில் நடைபெற்ற அரசியல் விவகாரக் குழு(பிஏசி) கூட்டத்தின்போது, கட்சியின் புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜும், பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளராக மணீஷ் சிசோடியாவும் நியமித்துள்ளது. மாற்றங்களை அறிவித்து ஆம் ஆத்மியின் பொதுச் செயலாளர் சந்தீப் பதக் கூறுகையில்,

கட்சி தனது தளத்தை விரிவுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குஜராத்தின் பொறுப்பை கோபால் ராய்க்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மாநிலங்களவை எம்பியான பதக், ஆம் ஆத்மி கட்சியின் சத்தீஸ்கர் பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் பங்கஜ் குப்தா கோவாவின் பொறுப்பைக் கவனித்துக்கொள்வார். ஜம்மு-காஷ்மீர் பிரிவின் புதிய தலைவராக மெஹ்ராஜ் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பாஜக அளித்த நிறைவேறாத வாக்குறுதிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, இதில் பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ.2,500 மற்றும் இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்குவதும் அடங்கும் என்று பதக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து