முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      இந்தியா
Siddaramaiah-TK-Sivakumar-2

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது.

கர்நாடகாவில் முதல் மந்திரி, மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோரின் சம்பளம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மசோதா நேற்று அம்மாநில சட்டசபையில் நிறைவேறியுள்ளது. கர்நாடக சட்டசபை சம்பளம், பென்சன் மற்றும் படிகள் திருத்த மசோதாப்படி, முதல் மந்திரியின் சம்பளம் ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாகவும், மந்திரிகளின் சம்பளம் ரூ.60ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும், எம்.எல்.ஏ.,க்கள் எம்.எல்.சி.,க்களின் சம்பளம் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாகவும், பென்சன் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.95 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து படி ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாகவும், சொந்த தொகுதியில் பயணம் மேற்கொள்ள ரூ.60 ஆயிரமாகவும், மருத்துவ படி, டெலிபோன் கட்டணம், தபால் கட்டண படி ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1.10 லட்சமாகவும் சபாநாயகர், சட்ட மேலவை தலைவர் சம்பளம் ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.25 லட்சம் ஆகவும் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து