முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பென்னிகுவிக் மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      தமிழகம்
Rajendharan-2024-12-20

Source: provided

தேனி : தேனியில் லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் மண்டபத்தில் அருங்காட்சியகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் பேசிய கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. என்.ராமகிருஷ்ணன் (தி.மு.க.), பென்னிகுவிக் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் லோயர் கேம்ப்பில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா, உணவகம், தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், "இங்கிலாந்து நாட்டிலிருந்து தன் சொத்துக்களை எல்லாம் விற்று முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் அவர்களுக்கு அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான உறுப்பினரின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து