எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒட்டன்சத்திரம், ஆக.- 15 - திண்டுக்கல், கரூர் மாவட்டங்களின் விவசாய விளை நிலங்களுக்கும் குறிப்பாக ஒட்டன்சத்திரம் நகர மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது பரப்பலாறு அணையாகும். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலைப்பகுதியின் வடகிழக்கில் அமைந்துள்ள பாச்சலூர் மலைப்பகுதியில் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராமத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வடகாடு கிராமம் பாச்சலூர் மலைப்பகுதியில் பரப்பலாறு நதியாக தோன்றி பழனிக்குச் செல்லும் வழியில் உள்ள விருப்பாச்சிக்கு அருகில் தலைகுத்து என்ற தலையூத்துக்கு கீழாக நங்காச்சி ஆறு எனப் பெயர் பெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் இந்த ஆறு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒட்டனைக்கட்டு வரை சென்று விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தருகிறது. இந்துக்களின் புனித தலமாக வடக்கே காசியின் தெய்வீகத்தையும் மகத்துவமும் இருப்பதால் பக்தர்கள் இதை ''நல்காசி ஆறு'' என்றே இன்னமும் அழைக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மட்டும் அல்லாது தமிழகத்தில் பல கோவில்களுக்கு இங்கு வந்து தீர்த்தம் எடுத்துச் சென்று தங்கள் குலதெய்வம் உள்ளிட்ட இதர தெய்வங்களுக்கும் தீர்த்தாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். நல்காசி ஆறு எனப்படும் நங்காஞ்சியாறு காவேரி நதியின் கிளை நதியான அமராவதி ஆற்றின் உபநதியாகும். பரப்பலாற்றின் குறுக்கே தலையூத்துக்கு மேலே நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் ஒட்டன்சத்திரம் பாச்சலூர் மலைப்பாதையில் அமைந்துள்ளது. நங்காஞ்சி ஆற்றினால் பயன்பெற்று வந்த 1373 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு உறுதியான பாசன நீர் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் கூடுதலாக 1000 ஏக்கர் பாசன நிலங்களை கூடுதல் பயன் பெறுவதற்கும் பரப்பலாறு நீர்த்தேக்கத் திட்டம் 1971ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரூ.10.40 லட்சம் மதிப்பிலான தொகை செலவு செய்யப்பட்டு 1974ம் ஆண்டு நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டது.
பரப்பலாறு நீர்த்தேக்கம் முற்றிலும் கற்களால் கட்டப்பட்டுள்ளது அணையின் சிறப்பு அம்சமாகும். அணையின் மொத்த நீளம் 81.08 மீட்டர் ஆகும். ஆற்றின் ஒரு மடையின் அளவு அதாவது ஒரு கண் அளவு 1.52 மீட்டர் ஞ் 1.83 மீட்டர் அளவில் உருவாக்கி அமைக்கப்பட்டுள்ளது. நீர் வெளியேற்றப்படும் அணைப்பகுதியில் 3 கண்கள் 9.75 மீட்டர் ஞ் 4.57 மீட்டர் என்கிற அளவுகளில் வளைவு கதவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்று மடையின் அடித்தளம் மட்டம் 527.305 மீட்டர். அணையின் நிறை நீர் மட்டம் 554.780 மீட்டர். உச்சநீர் மட்டம் 555.65 மீட்டராகும். அணையின் கரை மேல் மட்டம் 557.780 மீட்டராகும். அணைக்கட்டின் கொள்ளளவு உயரம் 27.44 மீட்டராகும். இந்த அணையின் நீர் வழிந்தோடி உலகின் பிரபலமான அணைக்கட்டுகள் அமைந்துள்ள பிலிப் பக்கெட் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது அணைக்கு கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும்.
பரப்பலாறு அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மி.கன அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து போதிய நீர் வரத்து கிடைக்கப் பெறும் அணையின் வண்டல் மண்படிந்து நீரின் கொள்ளளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் நீரியல் ஆய்வகம் 2002ம் ஆண்டில் விரிவான ஆய்வு மேற்கொண்டு அணையின் கொள்ளளவு குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. 2002ல் நீரியல் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் 197.95 மி.கன அடி உள்ள பரப்பலாறு அணையின் நீர் மட்டம் 4.021852 மி.க. மீட்டர் குறைந்துள்ளதாகரும் 1.58409 மி.கன மீட்டர் வண்டல் மண் படிந்துள்ளது எனவும் அறக்கை சமர்பிக்கப்பட்டது. நீரியல் ஆய்வக அறிக்கை எண் 1/2003 மதிப்பிட்டுள்ள 1584090 கன மீட்டர் வண்டல் மண்ணை அப்புறப்படுத்த 12.55 லட்சம் தொகைக்கான மதிப்பீடு தயாரித்து திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 1974ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பரப்பலாறு அணையின் மூலமாக 1504 டன் கூடுதல் உணவு உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த அணைக்கட்டின் நீர் ஆதாரத்தின் மூலமாக ஒரு டன் உணவு உற்பத்திக்கு ரூ.6300 மட்டுமே செலவாகும் என விவசாயத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு ஏக்கருக்கு மொத்த செலவு ரூ.4480 மட்டுமே எனவும் விவசாய வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பரப்பலாறு அணைக்கட்டின் நீர்வள ஆதாரத்தின் மூலமாக திண்டுக்கல், கரூர் ஆகிய இரு மாவட்டங்களில் 9 அணைக்கட்டுகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாள்குளம் அணைக்கட்டு, சடையகுளம் அணைக்கட்டு, ராமசமுத்திரம் அணைக்கட்டு, ஜவ்வாதுபட்டி பெரியகுளம் அணைக்கட்டு, ஜவ்வாதுபட்டி அணைக்கட்டு, வரதாகன் அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுகள் மூலமாக சுமார் 1278 ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பயனடைந்து வருகிறது. பரப்பலாறு அணையின் மூலமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கோறையூத்து அணைக்கட்டு ஒட்டனை அணைக்கட்டு, அரவக்குறிச்சி அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுகள் மூலமாக சுமார் 1323 ஏக்கர் நிலம் பாசனப்பயன்பாடு பெற்று வருகிறது. தற்சமயம் உலக வங்கியின் நிதி ஆதாரம் மூலமாக பரப்பலாறு அணை மராமத்து செய்யப்பட்டு தூர்வாரப்பட்டு உள்ளது. கடந்த முறை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நிலத்தடி நீரை சேமிக்க கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்கியதால் இன்றைக்கு குடிநீர் ஆதாரம் வெகுவாக காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நீர்வளத்தை காப்பதற்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை வகுத்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு பொதுப்பணித்துறையின் மூலமாக குளங்கள் முதல் அணைக்கட்டுகள் வரை மராமத்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே நீர்வள ஆதாரம் பெருக அணைக்கட்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் தமிழக முதல்வரை விவசாயிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பல்வேறு சிறப்புத்தகுதி படைத்த பரப்பலாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள அணைக்கட்டு பகுதியை சுற்றுலாத்தளமாக அறிவிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 4 weeks ago |
-
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி-20: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?
27 Jan 2025ராஜ்கோட் : இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும்ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.
-
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த தகவலால் பரபரப்பு
27 Jan 2025கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மக்கள் மத்தியில் தோன்றுவார் என புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
27 Jan 2025மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 403 அடியாக சற்று குறைந்துள்ளது.
-
தமிழகத்தில் 7-வது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
27 Jan 2025சென்னை: தமிழகத்தில் 7வது முறையும் தி.மு.க.,வே ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
-
தமிழகத்தில் வரும் 30, 31-ம் தேதிகளில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
27 Jan 2025சென்னை: தமிழகத்தில் வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக
-
ராமாயணா விமர்சனம்
27 Jan 2025ராமாயணத்தின் கதையை அனிமேஷன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும்படி எடுக்கப்பட்டுள்ள படம் ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா.
-
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு: சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவத்தின் கால் பகுதி கண்டெடுப்பு
27 Jan 2025விருதுநகர்: வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
100 நாள் வேலைத்திட்ட நிலுவை தொகை: மத்திய அமைச்சர் நிர்மலாவிடம் தங்கம் தென்னரசு நேரில் மனு
27 Jan 2025சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாட
-
வரிகளை உயர்த்தினால்....அமெரிக்க அதிபருக்கு சவால் விடுத்த கனடா
27 Jan 2025கனடா: கனடா மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா உயர்த்தினால் அவர்களுக்கு வழங்கும் எரிசக்தி விநியோகத்தைத் துண்டிக்க இருப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
-
எதிர்க்கட்சிகளின் பல திருத்தங்கள் நிராகரிப்பு: வக்ஃப் திருத்த மசோதா இறுதி செய்தது பார்லி., கூட்டுக்குழு
27 Jan 2025புதுடெல்லி: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றக் கூட்டுக்குழு இறுதி செய்துள்ளது.
-
அரசுப் பள்ளிகளே நமது பெருமையின் அடையாளம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Jan 2025சென்னை: அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
பூர்வீகம் விமர்சனம்
27 Jan 2025பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பூர்வீகம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-01-2025.
27 Jan 2025 -
டிரம்ப் எச்சரிக்கைக்கு அடிபணிந்ததால் கொலம்பியா மீதான இறக்குமதி வரி தடையை நீக்கம்: அமெரிக்கா
27 Jan 2025அமெரிக்கா: அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களை கொலம்பிய அரசு ஏற்றுகொண்டதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக்கான வரி மற்றும் தடையை அமெர
-
பாட்டல் ராதா விமர்சனம்
27 Jan 2025மது நாட்டுக்கும் வீட்டிற்கும் தனி மனிதனுக்கும் கேடு மட்டுமல்ல ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை எப்படி சீர்குலைக்கிறது என்பதை கலகலப்பாகவும், கண் கலங்கும்படியும் சொல்ல
-
பல்கலை. மாணவி விவகாரம்: சுப்ரீம கோர்ட் முக்கிய உத்தரவு
27 Jan 2025புதுடெல்லி : சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலை.
-
ஈரோடு கிழக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்
27 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
-
மை லார்ட் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
27 Jan 2025சசிகுமார் நாயகனாக நடிக்கும் மை லார்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
-
சென்னையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
27 Jan 2025சென்னை : சென்னையில் வரும் ஜன.29-ம் தேதி, தி.மு.க.
-
சிதம்பரத்தில் கவர்னருக்கு எதிப்பு: இன்டியா கூட்டணியினர் கைது
27 Jan 2025சிதம்பரம் : சிதம்பரத்தில் கவர்னருக்கு எதிப்பு தெரிவித்த 100-க்கும் மேற்பட்ட இன்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் புதிய ஆட்டோ கட்டணம் : குறைந்தபட்சம் ரூ.50 ஆக நிர்ணயம்
27 Jan 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் வருகிற 1-ம் தேதி முதல் உயருகிறது.
-
சென்னை காவல் ஆணையர் மீதான நடவடிக்கைக்கு தடை மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
27 Jan 2025புதுடெல்லி: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய சென்னை உயர்நீதிமன்ற கருத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித
-
சனாதனம் குறித்த பேச்சு: துணை முதல்வர் உதயநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
27 Jan 2025புதுடெல்லி : சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
பள்ளிக்கல்வித்துறையில் 47,013 பணியிடங்கள் நிரந்தரமானது : தமிழக அரசு அறிவிப்பு
27 Jan 2025சென்னை : பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் இல்லாத 47,013 பணியிடங்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
நவாஸ்கனி எம்.பி மீதான வழக்கு: ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
27 Jan 2025சென்னை : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.