முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் ஆண்டு தோறும் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை 137 நாட்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்.

இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். கடந்த ஆண்டு 16 நாட்கள் தாமதமாக ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரை கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி நிறுத்தியிருக்க வேண்டும், ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 16-ந் தேதியான நேற்று வரை நீர் திறப்பு நீட்டிக்கப்பட்டது.

நேற்று (16-ந் தேதி)மாலை 6 மணிக்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் நடப்பாண்டில் கால்வாய் பாசனத்திற்கு 153 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக கால்வாயில் 16 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணைக்கு 2 ஆயிரத்து 393 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2 ஆயிரத்து 555 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரியில் 500 கனஅடியும், கால்வாயில் 400 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 105.49 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 105.58 அடியாக உயர்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து