முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் போர் நிறுத்தம் அமல்: ஒரு இஸ்ரேலிய பிணை கைதிக்கு 50 பாலஸ்தீனியர்கள் விடுதலை

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      உலகம்
Israel

Source: provided

ஜெருசலேம் : இன்று முதல் 3 கட்டங்களாக இஸ்ரேலிய பிணை கைதிகள் 33 பேருக்கு பதில் 1,904 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவுள்ளனர்.

இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த நிலையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே இன்று காலை 8.30 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி) போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இந்த போர் நிறுத்தம் 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.

முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 33 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

பணய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் என்ன?  போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் பகுதி 6 வாரங்களை (42 நாட்கள்) கொண்டது. இன்று(ஞாயிற்றுகிழமை) காலை 8.30 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி) போர் நிறுத்தம் அமலுக்கு வரும்.  போர் நிறுத்தப்படி ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் 33 பேரை 42 நாட்களுக்குள் விடுதலை செய்யும்.  போர் நிறுத்தம் அமலுக்கு வரும் முதல் நாளான இன்று(ஞாயிற்று கிழமை) பணய கைதிகளில் 3 பெண்களை ஹமாஸ் விடுதலை செய்யும்.

எஞ்சிய 30 பணய கைதிகள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் 6 வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுதலை செய்யப்படுவர். * இஸ்ரேலிய பணய கைதிகள் 33 பேர் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பெண்கள், குழந்தைகள், முதியோர், காயமடைந்தோர் என வகைப்படுத்தப்பட்டு ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

உயிருடன் உள்ள பணய கைதிகளில் ஒவ்வொரு பெண், குழந்தை, முதியோருக்கு ஈடாக தலா 30 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும். (எடுத்துக்காட்டாக பணய கைதியாக உள்ள இஸ்ரேலிய குழந்தையை ஹமாஸ் விடுதலை செய்யும்போது அந்த குழந்தைக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும். அதேபோல், ஒரு பெண் பணய கைதிக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களும், ஒரு முதிய பணய கைதிக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களும் விடுதலை செய்யப்படுவர்).

காயமடைந்து, நோய்வாய்ப்பட்டுள்ள 9 பணய கைதிகளுக்கு ஈடாக 110 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். பணய கைதியாக உள்ள ஒவ்வொரு இஸ்ரேலிய பாதுகாப்புப்படை வீராங்கனைகனைக்கு ஈடாக 50 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர்.  ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் காசாவில் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களான அவிரா மென்கிடு மற்றும் ஹசிம் அல் சயது ஆகியோருக்கு ஈடாக தலா 30 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். மேலும், 2011ம் ஆண்டு பணய கைதிகள் ஒப்பந்தபடி விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனியர்கள் 47 பேர் விடுதலை செய்யப்படுவர்.

போர் நிறுத்தத்தின் முதல்பகுதியில் (6 வாரங்கள்) காசா முனையில் உள்ள பணய கைதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவர். போர் நிறுத்தத்தின் முதல் பகுதியில் 33 பணய கைதிகள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகளின் எண்ணிக்கை 65 ஆக இருக்கும். எஞ்சிய பணய கைதிகள் போர் நிறுத்தத்தின் 2ம் பகுதியில் பரிமாற்றம் செய்யப்படுவர்.

ஒட்டுமொத்தமாக போர் நிறுத்தத்தின் முதல் பகுதியில் ஹமாஸ் ஆயுதக்குழு பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்கிறது. 33 பேருக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களில் 1,904 பேரை விடுதலை செய்கிறது. இஸ்ரேல் விடுதலை செய்யும் பாலஸ்தீனியர்களில் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களும் அடக்கம். இதில் பலர் பயங்கரவாத செயல்கள், துப்பாக்கி சூடு தாக்குதல்கள், குண்டுவெடிப்பு தாக்குதல், கத்திக்குத்து தாக்குதல், இஸ்ரேலியர்களை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் அடக்கம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து