முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மகா கும்பமேளாவில் புனித நீராடினார் ராஜ்நாத் சிங்

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

Source: provided

லக்னோ : உ.பி. மகா கும்பமேளாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [ திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும். 40 கோடி பேர் வரை இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புனித நீராடுவதற்காக பொது மக்களும் முக்கிய பிரமுகர்களும் மகாகும்பத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சசிங் மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ளார்.

புனித திரிவேணியில் அவர் நேற்று [சனிக்கிழமை] நீராடினார். நேற்று மதியம் 12 மணிக்கு பிரயாக்ராஜை அவர் வந்தடைந்தார். இரண்டு நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் வந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதுவரை, 2025 மகாகும்பத்தில் 7 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விடுத்த அழைப்பின்படி பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 8 அல்லது 9 ஆம் தேதி கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து