முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மற்றும் திருச்சியில் டைடல் அமைக்க பூங்கா சுற்றுச்சூழல் அனுமதி

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      தமிழகம்
Daital 2025-01-17

Source: provided

சென்னை : மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் டைடல் பார்க் நிறுவனம், சென்னை, தரமணி, பட்டாபிராம், கோயம்புத்தூரை தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியில் டைடல் பூங்கா அமைக்கும் நடவடிக்கையில்  உள்ளது.

திருச்சிராப்பள்ளியில் திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பஸ்நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்படுகிறது. 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமைய உள்ளது. 

அதேபோல், மதுரையில் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் கட்டிடம் கட்ட திட்ட மிடப்பட்டுள்ளது. இதன்படி தரை மற்றும் 12 தளங்களுடன் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பார்க்கில் 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், இந்த இரண்டு டைடல் பூங்கா பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் பூங்கா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.

இந்நிலையில் அதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தற்போது சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக டைடல் பூங்காவின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து