முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்: ஐ.எம்.எப்.

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      உலகம்
INDIA

Source: provided

வாஷிங்டன் : 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

உலக பொருளாதாரம் குறித்த தனது கணிப்பை அறிக்கையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட ஐஎம்எஃப், அதன் தொடர்ச்சியாக தனது புதிய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், கடந்த அக்டோபர் மாதத்தில் கணிக்கப்பட்டபடி இந்தியாவில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் தொடங்கும் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.7 சதவீதம் வளர்ச்சியடையும் என்று உலக வங்கி கணித்திருந்தது. அதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டை விட சற்று அதிகமாகவும், வளர்ச்சிக் கணக்கில் தொடர்ந்து முதலிடத்திலும் இந்தியா இருக்கும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது.

உலகப் பொருளாதாரம் நிலையாக உள்ளதாகவும், உலக பொருளாதார வளர்ச்சி 2025 மற்றும் 2026ல் 3.3 சதவீதமாக இருக்கும் என்றும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 2.7 சதவீதமாகவும், 2026-ல் 2.1 சதவீதமாகவும் இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 1 சதவீதமாகவும், 2026-ல் 1.4 சதவீதமாகவும் இருக்கும். ஜெர்மனியின் பொருளதார வளர்ச்சி 2025-ல் 0.3 சதவீதமாகவும், 2026-ல் 1.1 சதவீதமாகவும் இருக்கும். பிரான்ஸ்ன் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 0.8 சதவீதமாகவும், 2026-ல் 1.1 சதவீதமாகவும் இருக்கும். இத்தாலியின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 0.7 சதவீதமாகவும், 2026-ல் 0.9 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எஃப் அறிக்கை தெரிவிக்கிறது.

இதேபோல், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 1.1 சதவீதமாகவும், 2026-ல் 0.8 சதவீதமாகவும் இருக்கும். இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 1.6 சதவீதமாகவும், 2026ல் 1.5 சதவீதமாகவும் இருக்கும். கனடாவின் பொருளாதார வளர்ச்சி 2025 மற்றும் 2026-ல் 2 சதவீதமாக இருக்கும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 4.6 சதவீதமாகவும், 2026-ல் 4.5 சதவீதமாகவும் இருக்கும். பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 3 சதவீதமாகவும், 2026-ல் 4 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது.

தொற்றுநோய்க்குப் பிறகு இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் உலகளாவிய வளர்ச்சி 3.3 சதவீதமாக நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் சீராகக் குறைந்து வருகிறது. இந்த ஆண்டு 4.2 சதவீதத்தையும் அடுத்த ஆண்டு 3.5 சதவீதத்தையும் இது எட்டுகிறது என்று ஐஎம்எஃப் தலைமைப் பொருளாதார நிபுணரும் ஆராய்ச்சி இயக்குநருமான பியர்-ஆலிவர் கவுரிஞ்சாஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து