முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் புதிய தலைவரானார் தேஜஸ்வி யாதவ்

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      இந்தியா
Tejaswi-Yadav

Source: provided

பாட்னா : ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் புதிய தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பாட்னாவில் நேற்று (ஜன.18) நடைபெற்றது. இதில், கட்சியின் தேசியத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், இந்த ஆண்டு வர உள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக செயற்குழு, தேஜஸ்வி யாதவை கட்சியின் தலைவராக நியமித்தது. தற்போது கட்சியின் தலைவராக அவரது தந்தை லாலு பிரசாத் உள்ளார். கட்சிக்கு உள்ளும் வெளியிலும் தேஜஸ்வி யாதவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், பீகாரின் ஒவ்வொரு அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்த மாநாட்டில் நாங்கள் ஆழமாக விவாதிப்போம். இந்தக் கூட்டம் கட்சியின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. 2025 தேர்தலில் ஆர்ஜேடியின் வெற்றிக்கு கட்சி முழுமையாக தயாராக உள்ளது. எங்களின் ஒவ்வொரு முடிவும் முக்கியமானதாக இருக்கும். அமைப்பு மற்றும் தேர்தல்கள் குறித்த எங்கள் உத்தி மிகவும் உறுதியானதாக இருக்கும். ஆர்ஜேடி எந்த திசையில் நகர்கிறது என்பதை நாங்கள் நாட்டுக்கு காண்பிப்போம் என தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து