முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வுக்கு வரும் ஆபத்தை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும் : தி.மு.க. சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      தமிழகம்
Duraimurugan 2022 12 11

Source: provided

சென்னை : தி.மு.க.வுக்கு வரும் ஆபத்தை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும் என்று தி.மு.க. 3-வது சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநில மாநாடு – சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. திராவிட இயக்கப் பாடல்களுடன் காலை 7 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்த மாநாடு இவ்வளவு பெரியதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, கொஞ்சம் பேர் இருப்பார்கள் அதில் கருத்துக்கள் வரும் என்று நினைத்திருந்தேன். ஒரு கட்சி மாநாட்டுக்குரிய கம்பீரம் இந்த சட்டத்துறை மாநாட்டிற்கு உள்ளது. தி.மு.க.வுக்கு வரும் ஆபத்தை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த இவ்வளவு பேர் உள்ளார்கள். இந்தப் படையை தோற்கடித்து எவராலும் எங்கள் மீது கை வைக்க முடியாது.

அந்த காலகட்டத்தில் தி.மு.க.விற்கு ஒரே ஒரு வக்கீல் தான். அவர் தான் கோகுல கிருஷ்ணன். கோயம்புத்தூர் முதல் கும்மிடிப்பூண்டி வரை எந்த வழக்கு வந்தாலும் கோகுல கிருஷ்ணன் தான் பார்ப்பார். அவர் நீதிபதியாக ஆன பிறகுதான் சண்முகசுந்தரம் வந்தார். ஜெயலலிதா ஆட்சியில் சண்முகசுந்தரத்தை 21 முறை வெட்டினார்கள், அவ்வளவு பெரிய தியாகத்தை செய்தவர் சண்முகசுந்தரம்.

இந்தியாவில் நம்முடைய சட்டத்துறைதான் அநியாயங்களை தட்டி கேட்கக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்றது. செக்யூலரிசத்தை கூட ஒரு ஜனாதிபதி உச்சரிக்க மாட்டார் என்றால் இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது. எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசு குவித்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். மத்திய அரசிடமிருந்து சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வழக்கறிஞர்களாகிய உங்களிடம் உள்ளது. நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.

தமிழ்நாட்டில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராவார் என்ற முன்னுரையாக இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி முடியும்போது பல்வேறு வழக்குகள் இருக்கும். மீண்டும் இந்த வழக்குகளை சந்தித்து பொது வாழ்க்கை தொடர வேண்டுமென்றால் வழக்கறிஞர்கள் ரொம்ப முக்கியம். வழக்கறிஞராக மட்டுமல்ல நீதி பரிபாலனம் சொல்லக்கூடிய இடங்களில் நீங்கள் மற்றும் உங்கள் பிள்ளைகள் இருக்க வேண்டும். அப்படி வந்தால் தான் திராவிட மாடல் ஆட்சி 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து