முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை அழிக்க பார்க்கிறது : தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      தமிழகம்
cm 2024-12-03

Source: provided

சென்னை : மோடியை சர்வாதிகாரி ஆக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் பயன்படும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநில அரசுகளை அழிக்கப்பார்க்கிறது மத்திய பா.ஜ.க. அரசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநில மாநாடு... 

தி.மு.க. சட்டத்துறை சார்பில் 3-வது மாநில மாநாடு நேற்று (சனிக்கிழமை) ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ளே செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- பா.ஜ.க.வின் செயல்திட்டம் பெரும்பாலும் குறுகியகால செயல்திட்டமாக இருக்காது, நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவோம் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல் என்று சொல்லும் நிலையை உருவாக்க நினைக்கிறார்கள். 

சர்வாதிகாரி ஆக்கவே... 

இது ஒற்றை ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும். இது தனிமனிதர் ஒருவரிம் அதிகாரத்தை கொண்டு போய் சேர்க்கும். பா.ஜ.க. என்ற கட்சிக்கே கூட இது நல்லதல்ல. இன்று பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியை சர்வாதிகாரி ஆக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் பயன்படும். பா.ஜ.க.வும், பா.ஜ.க.வுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கக்கூடிய வலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க.வை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. அவர்கள் இந்த சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என இந்த கூட்டத்தின் வாயிலாக நான் கோரிக்கை வைக்கிறேன். 

யாரும் ஆதரிக்கக்கூடாது... 

பா.ஜ.க.வை ஆதரிப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் இந்தியாவின் கூட்டாட்சி கருத்தியலுக்கு முரணான சட்டங்களை மக்களாட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் கட்சிகளும் ஆதரிக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை அழிக்கப்பார்கிறது மத்திய பா.ஜ.க. அரசு . இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி கருத்தியலுக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நாம் இறுதிவரை எதிர்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து