முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் அரிப்பு: தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      தமிழகம்
Shekhar-Babu 2024-08-27

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஏற்பட்ட கடல் அரிப்பை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தனர்.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டுச் செல்கின்றனர். அங்குள்ள கடலில் புனித நீராடிய பின்னர் முருகனை தரிசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கடல் சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிகளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவில் முன்பு சுமார் 50 அடி தூரத்துக்கு, 8 அடி ஆழத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரையில் 50 அடி தூரத்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கம்புகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பாறைகள் வெளியில் தெரிவதால் பக்தர்கள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஐ.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆய்வு தொடர்பான அறிக்கையை ஐ.ஐ.டி. அதிகாரிகள் தமிழக அரசிடம் சமர்ப்பித்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து