முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: இஸ்ரேல் நாட்டு பிணை கைதிகளை இன்று முதல் விடுவிக்கிறது ஹமாஸ்

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      உலகம்
Israel 2024-12-29

Source: provided

டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், இன்று (ஞாயிறு) முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு மாற்றாக சிறைகளில் இருந்து பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பதும் நிகழவிருக்கிறது. இருப்பினும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது.

3 கட்டங்களாக.. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் முதல் ஆறு வாரம் இரு தரப்பினரும் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி, இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. முதல் கட்டமாக ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தம் இருக்கும். அப்போது ஹமாஸ் தரப்பிலிருந்து 33 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர். இவர்களில் பெண்கள், குழந்தைகள், ராணுவ வீரர்கள் அடங்குவர்.

அதேபோல் இஸ்ரேல் தரப்பு இந்த காலக்கட்டத்தில் 737 பாலஸ்தீனர்களை விடுவிக்கும். இதற்கான பட்டியல் தயாராகியுள்ளது. இந்தப் பட்டியலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஃபார் தி லிபரேஷன் ஆஃப் பாலஸ்தீன் அமைப்பின் முக்கியத் தலைவர் புஷ்ரா அல் தவில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத், ஃபதா இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஹமாஸ், இஸ்ரேல் விடுவிப்பு பட்டியல்கள் தயாராக இருந்தாலும் கூட இருதரப்பிலும் இந்த விடுவிப்பு நிகழ்வானது ஞாயிறு மாலை 4 மணி அளவில் நடக்கும் எனத் தெரிகிறது.

46,000+ பலி.. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதில், காசாவில் 46,700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. 23 லட்சம் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவில் பரவலான அழிவு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பிணைக் கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தம், போர் நிறுத்த ஒப்பந்தம் எல்லாம் கையெழுத்தானாலும் கூட காசாவில் இஸ்ரேல் தாக்குதல் ஓய்ந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 88 உடல்கள் வந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து