எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், புதியதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசுகையில்,
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் என்ற நெருக்கடியான காலக்கட்டத்தில், நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அரசு சார்பாக மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை ஏராளமாக உருவாக்கி உள்ளதையும், படுக்கைகள் இல்லை என்ற புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தும், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை மாறி உள்ளதையும் முதல்வர் எடுத்துக் கூறினார்.
மேலும், ஏராளமான தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கி உள்ளதையும், ஆக்சிஜனை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பெற்றுத் தட்டுப்பாடு இல்லாத நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளதையும் முதல்வர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். மேலும், கல்வியில் - வேலைவாய்ப்பில் - சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட கலெக்டர்கள் அதிகாரத்தை, பதவியைப் பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும் என்று முதல்வர் தெரிவித்தார்.
வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் ஆகிய 7 இலக்குகளைப் பத்தாண்டு காலத்தில் எட்டிட மாவட்ட கலெக்டர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என்று தெரிவித்தார்.
பொதுவிநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்திட வேண்டும் என்றும், அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும், வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாக - தரமானதாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கவனச்சிதறல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்திடவும், அரசின் இலக்குகளைத் தங்களது இலக்குகளாகக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
நகர்ப்புற வளர்ச்சியும் ஊரக வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் என்று தெரிவித்த முதல்வர், காலிப் பணியிடங்களைத் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பிடவும், மாநில அரசும் ஒன்றிய அரசும் ஒதுக்கும் நிதியை முறையாகச் செலவு செய்து திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாநில அமைச்சர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியவர்களோடு மாவட்ட கலெக்டர்கள் இணைந்து பணியாற்றி, சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளித்து, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தனது அரசு உத்தரவு போடும் அரசு மட்டுமல்ல, மாவட்ட கலெக்டர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்கும் அரசு என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வளம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
தமிழகத்திற்கு அதிக மழை பாதிப்பு இல்லை: வங்கக் கடலில் வரும் 23-ல் உருவாகிறது ‘டானா’ புயல் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
20 Oct 2024சென்னை : வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு 'டானா' என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்த் தாய் வாழ்த்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
20 Oct 2024சென்னை : தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் நேர்ந்த தவறுக்கு கவனச் சிதறலே காரணம் என தூர்தர்ஷன் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை: கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
20 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட ஏதுவாக மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர்.
-
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு: 4 பேர் கைது
20 Oct 2024திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய டாக்டர் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&
-
அணியில் வாஷிங்டன் சுந்தர்
20 Oct 2024நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி : த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை
20 Oct 2024சென்னை : அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.
-
மகராஷ்டிர சட்டசபை தேர்தல் அட்டவணையில் பா.ஜ.க.வின் சதி : சஞ்சய்ராவத் குற்றச்சாட்டு
20 Oct 2024மும்பை : இந்திய தேர்தல் ஆணையத்தின் மகராஷ்டிரா தேர்தல் அட்டவணை ஆட்சி அமைப்பதற்கு 48 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்குகிறது.
-
ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் ஜனாதிபதி முர்மு
20 Oct 2024புதுடெல்லி : ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
-
தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு : எலான் மஸ்க் அறிவிப்பு
20 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் ஒன்றை எலான் மஸ்க் துவக்கி உள்ளார்.
-
காசாவில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்: மருத்துவர்கள் உட்பட 73 பேர் பலி
20 Oct 2024ஜெருசலேம் : வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மருத்துவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டனர்.
-
ஈரான் மீது தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்: அமெரிக்க உளவுத்துறையில் கசிந்த ஆவணங்கள்
20 Oct 2024வாஷிங்டன் : ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க உளவுத் துறையில் 2 ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு 101 வயது : தலைவர்கள் வாழ்த்து
20 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவின் முன்னாள் முதல்வர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர் வி.எஸ்.
-
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கடும் போட்டியை சந்திக்கும் : பா.ஜ.க. வேட்பாளர் நவ்யா உறுதி
20 Oct 2024கோழிக்கோடு : வயநாடு லோக்சபா தொகுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ப
-
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
20 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
-
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நவ. 2-ம் தேதி துவக்கம்
20 Oct 2024தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நவம்பர் 2-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.
-
அந்தமான் அருகே 23-ம் தேதி உருவாகிறது டானா புயல் : தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என தகவல்
20 Oct 2024சென்னை : அந்தமான் அருகே வங்கக்கடலில் வரும் 23-ம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
-
மக்கள் மத்தியில் அ.தி.மு.க.விற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது : எடப்பாடி பழனிசாமி பேச்சு
20 Oct 2024நெல்லை : தி.மு.க.விற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துவிட்டது என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.விற்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாக பேசினார்.
-
டெல்லியில் பள்ளி அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்
20 Oct 2024புதுடெல்லி : டெல்லி ரோகினி பகுதியில் சி.ஆர்.பி.எப்.
-
சேலம் அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
20 Oct 2024சேலம் : சேலம் அருகே ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நியூசி.க்கு எதிரான தோல்வி: கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்
20 Oct 2024பெங்களூரு : நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
அபார வெற்றி...
-
இந்தியை திணிக்க யாரும் முயற்சி செய்யவில்லை : மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி
20 Oct 2024சென்னை : இந்தி மொழியை திணிக்க யாரும் முயற்சிக்கவில்லை.
-
விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி: உதயநிதி ஸ்டாலின்
20 Oct 2024சேலம் : விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  
-
வரும் ஐ.பி.எல் தொடரில் டோனி விளையாடுவார் : சி.எஸ்.கே. சி.இ.ஓ. நம்பிக்கை
20 Oct 2024சென்னை : ஐ.பி.எல். தொடரில் டோனி விளையாட வேண்டும் என எங்களுக்கும் ஆசைதான் என்று தெரிவித்த சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ.
-
தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும்: தமிழிசை பேட்டி
20 Oct 2024சென்னை : தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
190 போா்க் கைதிகளை பரிமாறி கொண்ட ரஷ்யா - உக்ரைன்
20 Oct 2024மாஸ்கொ : ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக இருதரப்பில் இருந்தும் 190 போர்க் கைதிகள் விடு