முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு: 4 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      இந்தியா
Padmanabhaswamy 2024-10-20

Source: provided

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய டாக்டர் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலகப் புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே, பத்மநாபசுவாமி கோவிலில் கடந்த வியாழக்கிழமை திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. 

கோவிலில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் வெண்கலத்தால் ஆன தட்டு திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், திருட்டில் ஈடுபட்டது அரியானாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து. 

இதையடுத்து, அரியானா விரைந்த கேரள போலீசார் அம்மாநில போலீசார் உதவியுடன் கோவிலில் திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர் என்பதும் அவர் டாக்டராக பணியாற்றி வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கோவிலில் திருடப்பட்ட வெண்கல பூஜை தட்டை கைப்பற்றினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து