முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிர சட்டசபை தேர்தல் அட்டவணையில் பா.ஜ.க.வின் சதி : சஞ்சய்ராவத் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      இந்தியா
Sanjay-Rawat 2023 04 09

Source: provided

மும்பை :  இந்திய தேர்தல் ஆணையத்தின் மகராஷ்டிரா தேர்தல் அட்டவணை ஆட்சி அமைப்பதற்கு 48 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்குகிறது. இது மகா விகாஸ் அகாதி ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது என்பதை உறுதி செய்யும் பா.ஜ.க.வின் சதி என்று சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

சிவசேனாவை (உத்தவ் அணி) சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் நேற்றுசெய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மகராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறாது என்பதை அமித் ஷாவுடன் அக்கட்சியும் ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அதனால் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி விவாதித்து முடிவெடுக்கும் நேரத்தைக் குறைப்பதற்கான ஒரு யுக்தி இருப்பதாக தெரிகிறது. 

ஒருவேளை மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) ஆட்சியமைக்க உரிமை கோர தவறினால் அடுத்த ஆறு மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும். மகா விகாஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது. 

எம்.வி.ஏ. ஆட்சி அமைக்கும் வாய்ப்பை குறைக்கும் வகையில் திறம்பட மகராஷ்டிரா தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மகராஷ்டிராவில் நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதாவது, சிவ சேனா (உத்தவ் அணி), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சில சிறிய கட்சிகள் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க 48 மணிநேரம் மட்டுமே அவகாசம் இருக்கும். இது நியாயமற்றது.

தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் போலவே உள்ளது. தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆதரிக்கிறது. ஆனால் அரியானா தேர்தலில் இந்த இயந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த போது மவுனமாக இருக்கிறது.

மக்களவைத் தேர்தலின் போது பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து