முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி: உதயநிதி ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      தமிழகம்
Udayanidhi 2024-10-20

Source: provided

சேலம் : விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று காலை நேரு கலையரங்கில் நடந்தது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், 707 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 1,500 வீரர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும், கலைஞர் விளையாட்டு உபகரணங்களை கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அத்துடன், 3,583 பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, 

துணை முதல்வராக முதல் முறையாக சேலம் வந்து கலைஞர் விளையாட்டு உபகரணத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநிலம் முழுவதும் 12,575 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு 26 மாவட்டங்களில் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

 இந்தவிழாவில் பாராலிம்பிக் வீரர்கள் தங்கவேலு மாரியப்பன், துளசிமதி முருகேசன் இருவரும் வி.ஐ.பி.க்களாக பங்கேற்றுள்ளனர். இவர்கள் தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இது பலருக்கும் ஊக்கமளித்து வருகிறது.  

கடந்த முறை 6 லட்சம் பேர் கலந்து கொண்ட நிலையில், இந்த வருடம் 11 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இதுவே இந்த திட்டம் வெற்றியடைந்ததற்கான எடுத்துக்காட்டாக உள்ளது. முதல்வர் கடந்த 3 ஆண்டுகளில் 3350 பேருக்கு ரூ.110 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். 

விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும்.   விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல, மகளிர் உள்பட அனைவருக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் பொற்கால ஆட்சியாக உள்ளது. 

கிராமப்புறங்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுவது போல், நகர்புறங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.  60 பேர் தங்கி பயிற்சி பெறும் வகையில், ரூ.7 கோடியில் விரைவில் விளையாட்டு விடுதி அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாரியப்பன் தங்கவேலு, பேட் மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அமைச்சர்கள் மதிவேந்தன், ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து