முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியை திணிக்க யாரும் முயற்சி செய்யவில்லை : மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      தமிழகம்
Murugan 2024-05-31

Source: provided

சென்னை : இந்தி மொழியை திணிக்க யாரும் முயற்சிக்கவில்லை. மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சியின் இந்தி தின விழா நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும் என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. 

இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என்றும், இந்தியை யாரும் திணிக்கவில்லை என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,   பா.ஜ.க.வை தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பதுபோல் சித்தரிக்க தி.மு.க. முயல்கிறது. ஆனால் அது நிச்சயம் நடக்காது. தமிழகத்தில் பா.ஜ.க. நன்றாக வளர்ந்துள்ளது. 

இந்தி மொழியை திணிக்க யாரும் முயற்சிக்கவில்லை. மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளை கற்றுக் கொள்ளலாம். கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது சிறிய தவறு நேர்ந்துள்ளது. 

தவறுகள் நடப்பது சகஜம்தான். ஆனால் அந்த தவறுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவர்னர் எப்படி பொறுப்பாக முடியும்?. இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து