முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்: மருத்துவர்கள் உட்பட 73 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      உலகம்
Gaza 2024-10-20

Source: provided

ஜெருசலேம் : வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மருத்துவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி  ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் டிரோன்' தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலஸ்தீனத்தின் காசா நகரின் மீதும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி திட்டமிட்டுள்ளது.

வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மருத்துவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர். 

கடந்த 2 வாரத்தில் மட்டும் 400 பேர் வரை இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. லெபனானில் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அங்குள்ள மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து