முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் மீது தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்: அமெரிக்க உளவுத்துறையில் கசிந்த ஆவணங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      உலகம்
Israeli-America 2024-10-20

Source: provided

வாஷிங்டன் : ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த  அமெரிக்க உளவுத் துறையில் 2  ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.

பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடமாக தாக்குதல்  இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில்  42 ஆயிரத்துக்கும்  அதிகமான மக்கள்  உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான லெபனான் மீதும்  இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. 

ஹமாஸுக்கு  ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தலைநகர் பெய்ரூட்டில் வைத்து கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை சரமாரியாக ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. 

இதனால் ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் துடித்து வருகிறது. ஆனால்  ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல்  நடத்தப்படாது என்று  அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. 

இதற்கிடையே ஈரான் மீது சைபர் தாக்குதல் ஒன்றையும் இஸ்ரேல் நடத்தியது. இதில் தங்கள் அரசின் ரகசிய ஆவணகள் திருடப்பட்டதாக ஈரான் குற்றம்சாட்டியது. 

இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த  அமெரிக்க உளவுத் துறையில் 2  ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. அமெரிக்காவின் நேஷனல் ஜியோஸ்பாஷியல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சியில் இருந்த இந்த ஆவணங்களானது டெலிகிராமில்  கசிந்துள்ளது.  

இந்த ஆவணங்களில் ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேலிய படைகள் பிரத்யேக பயிற்சி  எடுத்துவரும் மற்றும் தாக்குதளுக்கு ஒத்திகை பார்க்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

முதல் ஆவணத்தில் இஸ்ரேல் விமானப் படை ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த எப்படியெல்லாம் தயாராகி வருகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு வானத்தில் ஈரானுக்கு எதிராக  இஸ்ரேல் தங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை தயார்ப்படுத்தி வருவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து