முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தயிர் ரொட்டி

Cooking time in minutes: 
20
Ingredients: 

தயிர் ரொட்டி செய்யத் தேவையான பொருள்கள்;

  1. தயிர் - ஒரு கப்.
  2. பால் - 1/4 கப். 
  3. எண்ணெய் - 300 மில்லி. 
  4. பிரட் துண்டுகள் - 10.
  5. பச்சை மிளகாய்  - 4.
  6. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப். 
  7. திராட்சை - 25 கிராம். 
  8. மல்லி இலை - சிறிதளவு.
  9. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு உப்பு,ஒரு கப் தயிர், 1/4 கப் பால் ஊற்றி  நன்றாக  கலந்து  வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து 300 மில்லி எண்ணெய்யை ஊற்றவும். 
  3. எண்ணெய் சூடானவுடன் 10 பிரட் துண்டுகளை சிறு சிறு துண்டாக வெட்டி எண்ணையில் போட்டு பொரிக்கவும்.திருப்பி போட்டு நன்றாக பொறித்து ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து,1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள், நீளமாக நறுக்கிய 4 பச்சை மிளகாய்,பொடியா நறுக்கிய 1/2 கப் வெங்காயம்,25 கிராம் திராட்சையை போட்டு நன்றாக வதக்கவும். 
  6. இதனுடன் தயிர்,பால்,சர்க்கரை,உப்பு போட்டு கலந்து வைத்துள்ள தயிர்கலவையை ஊற்றி சிறிதளவு மல்லி இலைகளை போட்டு கலந்து விடவும்.
  7. கலந்து வைத்துள்ள தயிர்கலவையை வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகள் மேல் சிறிது சிறிதாக ஊற்றவும்.
  8. சுவையான தயிர் ரொட்டி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago