எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காலநிலை மாற்றத்தின் காரணமாக, மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த சிக்கல்களை எதிர்கொள்வதற்கான ஒரு முன்னோடி முயற்சியாக, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த நல்வாழ்வு என்பது, மக்கள், விலங்குகள் மற்றும் சூழலியல் அமைப்புகளின் நல்வாழ்வை சமநிலைப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஓர் ஒருங்கிணைந்த மற்றும் ஓரலகுக் கட்டமைப்பு என உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள், நோய்க்கடத்திகள் வாயிலாகப் பரவும் நோய்கள், நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன், பல்லுயிர்ப்பெருக்கத்துக்கு ஏற்படும் இழப்பு, காலநிலை மாற்றம் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு, பொது சுகாதாரம், கால்நடை மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைந்த நல்வாழ்வு மையம் வலியுறுத்துகிறது.
காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் முன்னோடியாக உள்ள மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, வெப்பநிலை அதிகரிப்பு, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் பெருந்தொற்றுகள், நோய்க்கடத்திகள் வாயிலாகப் பரவும் நோய்கள், கடலோரப்பகுதிகளின் பாதிப்புகள் மற்றும் பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு ஏற்படும் இழப்பு உள்ளிட்ட தனித்தன்மை வாய்ந்த பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்தச் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக, பழங்குடியினர் வாழும் பகுதிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் அதிக இடர்பாடுகளை எதிர்கொள்ளும் பகுதிகள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் சமூகத்தினரின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கு ஒருங்கிணைந்த மற்றும் முன்னெச்சரிக்கை வாய்ந்த அணுகுமுறை அவசியமாகிறது.
ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை உருவாக்கியிருப்பது, காலநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கு, காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு தகவமைத்துக்கொள்ளக்கூடிய வகையிலான ஒரு சுகாதார அமைப்பு முறையை உருவாக்க வேண்டுமென்ற தமிழ்நாட்டின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
காலநிலை மாற்றம் மற்றும் மக்கள் நலனுக்கான தேசிய திட்டத்தின் இலக்குகளை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தமிழ்நாட்டின் உறுதியான முயற்சிகளுடன் இணைப்பதன் வாயிலாக, நிலையான மற்றும் சம அளவிலான வளர்ச்சியை பேணுவதில் இந்த மையம் முக்கிய பங்காற்றும். இந்த மையம், காலநிலைச் சூழ்நிலைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் ஏற்படும் நோய்களின் தீவிரத்தன்மையை மதிப்பிடுவதற்கு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முன்கூட்டியே கண்டறிந்து செயல்படுத்துவதற்கான மாதிரிகளை உருவாக்குவதற்கு செயல்படும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் இந்த மையத்திற்கு தலைமை வகிப்பார். தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர், உறுப்பினர் / செயலாளராகவும், தேசிய நல்வாழ்வு இயக்கத்தின் நிருவாக இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இதன் உறுப்பினர்களாவர்.
மேலும் இது, நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களைக் கொண்ட ஒரு செயலகத்தின் உதவியுடன் செயல்படுவதாக அமையும். ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம், காலநிலை தூண்டலால் ஏற்படும் உடல்நல சவால்களைச் எதிர்கொள்வதற்கான ஒரு வலிமையான, முற்போக்கு சிந்தனை அணுகுமுறையாக அமையும்.
இது, ஏற்படக்கூடிய சுகாதார கேடுகளை எதிர்கொள்வதற்கு தமிழ்நாட்டினை மேலும் ஆயத்தப்படுத்தும், மீள்தன்மையை அதிகரிப்பதோடு, நிலையான சுகாதார ஏற்பாட்டு முறைகளை ஊக்குவிக்கும். புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நடவடிக்கைகளை வளர்ப்பதன் வாயிலாக, இந்தியாவில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை உத்திகளுக்கு இந்த மையம் ஒரு முன்மாதிரியாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
பெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: இந்திய அணி பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறல் : முதல் நாளில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது
22 Nov 2024பெர்த் : பெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. முதல் நாளில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-11-2024.
22 Nov 2024 -
சர்வதேச கோர்ட்டின் முடிவு யூதர்களுக்கு விரோதமானது: நெதன்யாகு கண்டனம்
22 Nov 2024ஜெருசலேம் : சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் உட்பட 3 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்த முடிவானது யூதர்களுக்கு எதிரானது என்று நெதன்
-
கேரளாவில் இடைத்தேர்தல் நடந்த 3 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை
22 Nov 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடைத்தேர்தல் நடந்த வயநாடு பாராளுமன்ற தொகுதி மற்றும் செலக்கரா, பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. &nb
-
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
22 Nov 2024சென்னை : அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பட்டாபிராமில் புதிய டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
22 Nov 2024சென்னை : திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய டைடல் பூங்காவினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
வட இந்தியாவில் நிலவும் காற்று மாசு தேசிய அவசர நிலை: ராகுல்
22 Nov 2024புதுடெல்லி : வட இந்தியாவில் நிலவும் காற்று மாசு தேசிய அவசரநிலை என்றும் தீர்க்கமான நடவடிக்கை தேவை எனவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனை தாக்கியது ஒரேஷ்னிக் என்ற புதிய ஏவுகணை: புடின்
22 Nov 2024மாஸ்கோ : அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்ட புதிய ஒரேஷ்னிக் ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கியது வெற்றிகரமாக அமைந்தது என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு
22 Nov 2024சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமப் புறங்களிலும் இன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கத்தில் ரூ. 18.18 கோடியில் தொழில்நுட்ப மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
22 Nov 2024சென்னை : குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் ம
-
ரஜினியை சந்தித்தது ஏன்? - நாம் தமிழர் சீமான் விளக்கம்
22 Nov 2024சென்னை : நடிகர் ரஜினியுடன் நாம் தமிழர் சீமான் நேற்றஉ சந்தித்து பேசினார். அரசியல், திரைப்படம் உள்ளிட்டவை குறித்து ரஜினியுடன் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.
-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
22 Nov 2024திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது.
-
கிழக்கு லெபனானில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 47 பேர் பலி
22 Nov 2024பெய்ரூட் : கிழக்கு லெபனானில் இஸ்ரேல் படை நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் பலியானார்கள்.
-
மாநாட்டிற்கு நிலம் கொடுத்தவர்களை இன்று கவுரவிக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
22 Nov 2024சென்னை : விக்கிரவாண்டியில் த.வெக. அரசியல் மாநாட்டிற்கு நிலம் கொடுத்தவர்களை விஜய் கவுரவிக்க உள்ளார்.
-
அதானி மீதான லஞ்ச புகாரால் இந்திய, அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படாது :வெள்ளை மாளிகை
22 Nov 2024வாஷிங்டன் : அதானி மீதான லஞ்ச புகாரால் இந்திய – அமெரிக்க இடையேயான உறவில் விரிசல் ஏற்படாது என்று வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
நிஜ்ஜார் கொலை குறித்த ஊடக செய்திக்கு கனடா அரசு மறுப்பு
22 Nov 2024ஒட்டோவா : காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை பற்றி பிரதமர் மோடி அறிந்திருந்தார் என்று கனடா நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்த
-
டெல்லி சட்டசபை தேர்தல்: கெஜ்ரிவால் அறிவித்த 6 முக்கிய வாக்குறுதிகள்
22 Nov 2024புதுடெல்லி : டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று தொடங்கிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், வரும் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியை வெ
-
ஆசிரியையை கொலை செய்தது ஏன்? - காதலன் வாக்குமூலத்தால் பரபரப்பு
22 Nov 2024தஞ்சை : ஆசிரியை ரமணியை அவரது காதலன் மதன்குமார் பள்ளிக்குச் சென்று சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவத்தில், கொலை குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள
-
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்கண்டில் இன்று வாக்கு எண்ணிக்கை : இரு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
22 Nov 2024மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
நெசவுத்தொழில் தலைநிமிர நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Nov 2024சென்னை : தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைஎடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மணிப்பூர் ஐகோர்ட்டின் 8-வது தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பதவியேற்பு
22 Nov 2024இம்பால் : மணிப்பூர் ஐகோர்ட்டின் 8-வது தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
வரும் 2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
22 Nov 2024சென்னை : 2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
மணிப்பூர் விவகாரம்: காங்கிரஸ் மீது ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
22 Nov 2024புதுடெல்லி : வடகிழக்கு மாநிலங்களையும், மக்களையும் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
-
பிரபல நடிகை சீதா வீட்டில் 4.5 பவுன் நகை திருட்டு: வேலைக்கார பெண்களிடம் போலீசார் விசாரணை
22 Nov 2024சென்னை : பிரபல நடிகை சீதா வீட்டின் படுக்கை அறையில் வைத்திருந்த 4.5 பவுன் நகை திருடு போனது தொடர்பாக அவரது வீட்டில் பணியாற்றும் 2 வேலைக்கார பெண்களை பிடித்து போலீசார் விசா
-
மக்களை தேடி மருத்துவம்: 2 கோடியாவது பயனாளிக்கு விழுப்புரத்தில் 29-ம் தேதி மருந்து பெட்டகம் வழங்குகிறார் முதல்வர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
22 Nov 2024சென்னை : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளிக்கு வரும் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மருந்து பெட்டகத்தினை முதல்வர் மு.க.