முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் விவகாரம்: நிரந்தர தீர்வு காண மாயாவதி வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      இந்தியா
Mayavati 2023 07 02

Source: provided

லக்னோ : நீட் தேர்வில் நிலவும் நிச்சயமற்ற நிலை மக்களிடையே அமைதியின்மை, பதட்டம், கோபத்தை ஏற்படுத்துவதாகவும், நீட் தேர்வு விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

நீட் தேர்வில் நிச்சயமற்ற தன்மையால் மக்கள் அமைதியை இழந்துள்ளனர். நாட்டில் அவ்வப்போது நடைபெறும் பல்வேறு தேர்வுகளின் புனிதத்தன்மையுடன், தற்போது நிலவும் நிச்சயமற்ற தன்மை, குறிப்பாக நீட் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளால் மக்களிடையே அமைதியின்மை, பதட்டம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு விரைவான மற்றும் நிரந்தரத் தீர்வைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. அகில இந்திய அளவில் மட்டுமின்றி உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் அரசு ஆள்சேர்ப்பு விவகாரங்களிலும் ஊழல் நடந்துள்ளது வருத்தம் ஏற்படுத்துவதோடு கவலையையும் அளிக்கிறது. 

முறைகேடுகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சினைகளில் எந்தவித அரசியல் அலட்சியமோ, ஆதாயமோ இருக்க கூடாது. இவ்வாறு அந்த பதிவில் மாயாவதி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து