முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      இந்தியா
Gun 2023-10-05

புதுடெல்லி, ராகுல் காந்தி நேற்று (ஜூலை 8) மணிப்பூருக்கு சென்றார். முன்னதாக அதிகாலையில் ஜிரிபாம் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் மைதேயி மற்றும் குக்கி ஸோ சமூகத்தினர் இடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தற்போது கூட ஏராளமானோர் முகாம்களிலேயே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 8) மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி, கலவரம் வெடித்த ஜிரிபாம் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அதன்பின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்துப் பேசினார். அம்மாநில அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார். இதனிடையே நேற்று அதிகாலையில் ஜிரிபாம் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடு, குக்கி-ஸோ மற்றும் மைதேயி ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் சில வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன. நேற்று அதிகாலை 3 மணியளவில், அப்பகுதியில் இருந்த புறக்காவல் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஆயுதங்களுடன் இருந்த இருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர், அதைத் தொடர்ந்து அவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். கலவரம் ஏற்பட்ட பின்னர், ராகுல் காந்தி மணிப்பூர் செல்வது இது 3-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து