முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      விளையாட்டு
Sri-Lanka 2024-07-08

Source: provided

கொழும்பு : இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

இந்திய அணி....

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. டி20 தொடர் வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பேட்டிங் ஆலோசகர்... 

இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தேர்வுக் குழுவில் சனத் ஜெயசூர்யா ஏற்கனவே கடந்த காலத்தில் இருந்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணியின் பேட்டிங் ஆலோசகராக சனத் ஜெயசூர்யா செயல்பட்டார்.

கிறிஸ் சில்வர்வுட்... 

சனத் ஜெயசூர்யா இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,973 ரன்கள் குவித்துள்ளார். 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13,430 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 28 சதங்கள் மற்றும் 68 அரைசதங்கள் அடங்கும். கடந்த 1996 ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் அங்கம் வகித்துள்ளார். இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கிறிஸ் சில்வர்வுட் அண்மையில் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து