முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      தமிழகம்
EPS 2023 03 27

சென்னை, தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்.  புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை. தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை. தேனியில் குண்டர் சட்டத்தில் சிறை சென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி என கடந்த 24 மணி நேரத்துக்குள் இந்த செய்திகள் வந்துள்ளன. 

இனி  தி.மு.க. அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை.  எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகி விட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு.  இவ்வாறு அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து