முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாகன ஓட்டுநர்கள். ஒரு வாகன சீராளருக்கு பணி நியமன ஆணைகள் : அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      தமிழகம்
Saminathan 2023-09-18

Source: provided

சென்னை : தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  செய்தி மக்கள் தொடர்புத்துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு வாகன ஓட்டுநர்கள். ஒரு வாகன சீராளர் என மூவருக்கும் தலைமைச் செயலகத்தில் நேற்று  பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள். அறிவிப்புகள், அரசின் சாதனைகள், செய்தி வெளியீடுகள், அறிக்கைகள். வேண்டுகோள்கள் அனைத்தும் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் அரும்பணிகளைத் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன், செய்தி மக்கள் தொடர்புத் துறையில் காலியாக இருக்கும் திருப்பூர் மாவட்ட ஓட்டுநர் பணியிடத்திற்கு  ஆனந்தன். திருப்பத்தூர் மாவட்ட ஓட்டுநர் பணியிடத்திற்கு  எம். தமிழரசு ஆகியோரையும், மதுரை மாவட்டத்தில் வாகன சீராளர் பணியிடத்திற்குக் கருணை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள  சித்ராதேவி ஆகியோரை பணி நியமனங்கள் செய்து உரிய ஆணைகளை தலைமைச் செயலகத்தில் நேற்று  நேரில் வழங்கி, வாழ்த்துகள் கூறியதுடன் சிறப்பாகவும் பொறுப்பாகவும் பணிபுரியுமாறும் அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர்  ராஜாராமன்,  மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்  வைத்திநாதன்,  கூடுதல் இயக்குநர்(செய்தி)  செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து