முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மாநில முதல்வராக அதிஷி நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      இந்தியா
Adishi 2024-02-04

டெல்லி, டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி தலைமையிலான புதிய அமைச்சரவையின் பட்டியலை ஆம் அத்மி கட்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. மேலும், அதிஷி மற்றும் புதிய அமைச்சர்கள் சனிக்கிழமை (செப். 21) பதவியேற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய அமைச்சரவை பதவியேற்க அதிஷி துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து உரிமை கோரினார்.

டெல்லியின் முதல்வராக அதிஷி வருகின்ற சனிக்கிழமை பதவியேற்பார் என்றும், அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. சுல்தான்பூர் எம்.எல்.ஏ. மஜ்ரா முகேஷ் அஹ்லாவத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செளரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால் ராய் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து