முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமராஜரின் 50-வது நினைவு தினம்: கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 50-வது நினைவு தினத்தை முன்னிட்டு கர்மவீரரின் வாழ்வு காட்டும் 

ஒளியில் நடைபோடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 50-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு மலரஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இந்திய விடுதலைக்காகப் போராடி இன்னல்களை எதிர்கொண்டு, பின்னாளில் முதல்-அமைச்சராகத் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் தொழில்வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்த பெருந்தலைவர் காமராஜர் நினைவுநாள்! காந்தியப் பாதையிலிருந்து கடைசிவரை விலகாத கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து