முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதில் உயர்கல்வித் துறை செயலாளராக கோபால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராகவும் மின்வாரியத் துறைத் தலைவராக நந்தகுமார் ஐஏஎஸ், சமூக நலத் துறை ஆணையராக லில்லி ஐஏஎஸ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி ஐஏஎஸ், கல்லூரி கல்வித் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையராக விஷ்ணு சந்திரன் ஐஏஎஸ், கைத்தறித் துறை செயலாளராக அமுதவல்லி ஐஏஎஸ், ஜவுளித் துறையின் இயக்குனராக லலிதா ஐஏஎஸ்,  பொதுத் துறை துணைச் செயலராக பவன்குமார் ஐஏஎஸ், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ, விலங்குகள், கால்நடை மற்றும் மீன்வளத் துறைச் செயலராகவும் மனிதவள மேம்பாட்டுத் துறை செயலராக விஜயராஜ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து