முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏடிஎம் கொள்ளைக் கும்பலை பிடித்த தமிழக காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டு

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      தமிழகம்
DGP-2024-10-02

நாமக்கல், ஏடிஎம் கொள்ளைக் கும்பலை பிடித்த தமிழக காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் வங்கி ஏடிஎம் கொள்ளைக் கும்பலை பிடித்து, நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு மட்டுமின்றி தமிழக காவல்துறைக்கு இந்த சம்பவம் பெருமைமிக்கதாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கேரள மாநிலம் திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடித்து, தமிழகம் நோக்கி வந்த ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை நாமக்கல் மாவட்டக் காவல்துறையினர் வெப்படை அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும், கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மல்லசமுத்திரம் உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித்குமாரின் குடும்பத்தினரிடம் வெகுமதியை வழங்கும் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால்.நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும், கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மல்லசமுத்திரம் உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித்குமாரின் குடும்பத்தினரிடம்  வெகுமதியை வழங்கும் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால்.

இந்தச் சம்பவத்தில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஜுமாந்தின் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். முகமது ஹஸ்ரு என்ற மற்றொரு கொள்ளையன் பலத்த காயமடைந்தார். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஐந்து பேர் பிடிபட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் ஆய்வாளர் தவமணி, உதவியாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் படுகாயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரையும் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் புதன்கிழமை நண்பகல் ஒரு மணி அளவில் நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன், நலம் விசாரித்து அவர்களுக்கான வெகுமதியை வழங்கி பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் மற்றும் மூன்று துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 23 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கினார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பிடிபட்ட சம்பவம், நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு மட்டுமின்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து