முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ., பாடம் வரும் கல்வியாண்டில் அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      இந்தியா
10th-Exam 2023-04-06

Source: provided

புதுடெல்லி : ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., பாடமுறையில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ்,செயற்கை நுண்ணறிவு படிப்புகள் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

2025-26ம் ஆண்டு முதல் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் திட்டமிட்டுள்ளது. 

தேசிய கல்விக்கொள்கையின்  படி இந்த நடவடிக்கையை பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் மேற்கொள்கிறது. அதன் முக்கிய கட்டமாக 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு படிப்புகளை கொண்டு வருகிறது. 

தொடக்க நிலையில் இந்த புதிய படிப்புகள் ஒருங்கிணைந்த முறையில் தான் அளிக்கப்பட உள்ளது. கம்ப்யூட்டர் சயின்சுடன் செயற்கை நுண்ணறிவு பாடமும் சேர்க்கப்படுகிறது. 

இது தவிர முக்கிய அம்சமாக மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படுத்தப்பட்டு உள்ளதா என்று மதிப்பெண் அட்டை முறையில் கணக்கீடு செய்யப்பட திட்டமிட்டு உள்ளது. போட்டித் தேர்வுகளின் போது மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற ஏதுவாக, இதுபோன்ற பாடமுறை மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

தேசியக் கல்வி கொள்கையை பின்பற்றி கொண்டு வரப்படும் இந்த மாற்றங்கள் மூலம் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து