முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்து வரி, மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு, விலையேற்றம் ஆகியவற்றை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. தொண்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மாநகராட்சிக்குட்பட்ட வட்டங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நேற்று காலை 10.30 மணி அளவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.

சென்னையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. 

ராயபுரம் எம்.சி. ரோடு சுழல் மெத்தை பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலரும் பங்கேற்று கை கோர்த்து நின்றனர்.

வில்லிவாக்கம், கொளத்தூர் உள்பட 7 இடங்களில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு பங்கேற்றார்.  மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே திரளான தொண்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்பகுதியில் மொத்தம் 14 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. 

அண்ணாநகர் மண்டல அலுவலகம் அருகில் பகுதி செயலாளர் தசரதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் திரண்ட அ.தி.மு.க. வினர் நீண்ட தூரம் மனித சங்கிலியில் கைகோர்த்து நின்றனர். சென்னை வால்டாக்ஸ் ரோடு மண்டல அலுவலகம் அருகில் நடைபெற்ற மனித சங்கிலியில் மாவட்ட செயலாளர் பாலகங்கா மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

மதுரவாயலில் பகுதி செயலாளர் தேவதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அம்பத்தூரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் பங்கேற்றார். திருமங்கலத்தில் பகுதி செயலாளர் மோகன் தலைமையில் நடந்த மனித சங்கிலியில் வெங்கடேஷ் பாபு கலந்து கொண்டார். 

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 13 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. 128-வது வார்டுக் குட்பட்ட விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் விருகை ரவி தொண் டர்களுடன் கலந்து கொண்டார்.  அனைத்து மாநகராட்சி பகுதிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நேற்று அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து