முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களின் நிலை குறித்து கள ஆய்வு செய்ய உள்ளேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      தமிழகம்
CM 2024-10-22

Source: provided

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.810 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து நலத்திட்ட விழாவில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம்.  இங்கு விழா நடப்பது சிறப்பானது.  தி.மு.க. ஆட்சியில் நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைவது மிகவும் பொருத்தமானது. 

சேலம் மாவட்டத்தில் இருந்து 1997-ல் நாமக்கல் மாவட்டமாக பிரித்தவர் கருணாநிதி. அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த வகையில் நான் பெருமிதம் கொள்கிறேன்.சேந்தமங்கலத்தில் விளையும் பழம், காய்கறிகளை பதப்படுத்த வேளாண் விற்பனை மையம் தொடங்கப்படும். 

நைனாமலை வரதராஜபெருமாள் கோவிலுக்கு தார்ச்சாலை அமைத்துத் தரப்படும். 3 ஆண்டு ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களின் நிலை குறித்து கள ஆய்வு செய்ய உள்ளேன்.  மாவட்ட வாரியாக நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். 

தமிழகத்தின் மதிப்பையும் அ.தி.மு.க.வின் மதிப்பையும் எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்தார்.  எடப்பாடி ஆட்சியில் இருந்த போது தமிழகத்தின் மதிப்பே போயிருந்தது. அரசின் திட்டங்களால் பயன்பெறும் மக்களிடம் தி.மு.க.வின் மதிப்பை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். தி.மு.க. ஆட்சியால் பயன்பெறும் பெண்கள், குழந்தைகளுக்கு இந்த ஆட்சியின் பெருமை தெரியும். 

எதிர்க்கட்சி தலைவர் கூறுவதை மக்கள் காமெடியாக எடுத்துக் கொள்கின்றனர். நடந்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் கனவுலகில் இருக்கிறாரா? எனத்தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து