முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்டில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      இந்தியா
Cong 2024 08 10

Source: provided

புதுடெல்லி :  ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. மொத்தம் 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.

சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து காங்கிரஸ் தேர்தல் பணிக் குழு டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் 21 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் நள்ளிரவில் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.   

 வேட்பாளர்கள் பட்டியலில் ஜார்க்கண்ட் நிதி அமைச்சர் ராமேஸ்வர் ஓரான் இடம்பெற்றுள்ளார். அவர் லோஹர்தாகா தொகுதியில் களம் காண்கிறார். கட்சியின் மூத்த தலைவரும், திரிபுரா, ஒடிசா, நாகலாந்து மாநில பொறுப்பாளருமான அஜோய் குமார் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

சிப்லி நேஹா திர்கே மந்தர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இவரின் தந்தை பண்டு திர்கே, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் தலைவராக உள்ளார்.  

சட்டசபை தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து 70 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எஞ்சிய 11 தொகுதிகள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து