முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிமீறி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது: அமலாக்கத்துறைக்கு கண்டனம் : தெரிவித்த சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புது டெல்லி : விதிமீறி ஐ.ஏ.எஸ் அதிகாரியை கைது செய்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப் பிரிவு – 21 இருப்பதை மறந்து விடாதீர்கள். அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.

சத்தீஸ்கர்  மாநிலத்தில் கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, கலால் துறையில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. அதே போல் மாநில அரசின் ஊழல் தடுப்புப் பிரிவும் (ஏபிசி) வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

சுமார் 2,100 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்த இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் துதேஜாவை அமலாக்கத்துறை கைது செய்தது. முன்னதாக இவ்வழக்கு விசாரணையின் போது அமலாக்கத்துறை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் குறிப்பிட்ட ஒரே தேதியில் அமலாக்கத்துறையும், ஊழல் தடுப்புப் பிரிவும் அனில் துதேஜாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது. இரு விசாரணை அமைப்புகள் முன்பும் காலையிலும், மாலையிலும் அனில் துதேஜா ஆஜரானார்.

இவ்விஷயத்தில் அமலாக்கத்துறை இரவு வரை விசாரணை நடத்தி, அதன்பின் அனில் துதேஜாவை கைது செய்துள்ளது. அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், 

ஊழல் தடுப்புப் பிரிவு இந்த வழக்கை விசாரிக்கும் அதே நாளில் அமலாக்கத் துறையும் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணைக்கு மத்தியில் அமலாக்கத்துறை எப்படி நோட்டீஸ் அனுப்ப முடியும்? 

குற்றம்சாட்டப்பட்ட அனில் துதேஜாவை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? இத்தகைய அவசரம், தீவிரமான கிரிமினல் வழக்குகளில் கூட நடக்காது. 

அதே சமயம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 என்ற ஒன்று இருப்பதை விசாரணை அமைப்புகள் மறந்து விட்டதா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து