முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் : தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      தமிழகம்
Ration-shop

Source: provided

சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரவர் ஊதியத்திற்கேற்ப அதிகபட்சமாக ரூ 7 ஆயிரம் வரை போனஸ் பெறுவார்கள் என சொல்லப்படுகிறது.

நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.  இதன் மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ 16,800 வரை போனஸ் கிடைக்கும். 

அது போல் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி அவர்கள் அதிகபட்சமாக ரூ 7 ஆயிரம் வரை போனஸ் பெறுவார்கள்.

முன்னதாக அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து