முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிளாம்பாக்கம் பஸ் நிலைய பூங்காவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      தமிழகம்
Segarbabu-Anparasan 2024-10

Source: provided

சென்னை : கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்காவை நேற்று  அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் 16 ஏக்கர் பரப்பளவில்  காலநிலை பூங்கா ரூ.15.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. நடைபாதை, பூச்செடிகள், மரங்கள், சிறிய குளங்கள், சிறுவர் பூங்கா, விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன்  பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்காவை நேற்று  அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அன்றாடம் பயன்படுத்தும் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி  வருகிறோம். அதன்படி 16 ஏக்கர் பரப்பளவில்  மக்களுக்கு பயன்படும் வகையில் காலநிலை பூங்கா ரூ. 15.2 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த காலநிலை பூங்காவில் பல்வேறு வகையான செடி கொடி மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்புக்கான குளங்களும் உள்ளன.  மக்கள் காலை நேரங்களில் நடைபயிற்சி செல்வதற்காகவும், குழந்தைகளின் பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பூங்கா பொது மக்களுக்கு ஒரு பொழுது போக்கான பூங்காவாக அமையும். இந்த பூங்காவும், முடிச்சூர் பகுதியில் அமையும் ஆம்னி பஸ்நிலையம் ஆகிய இரண்டையும் அடுத்த மாதம் முதல்வர் திறந்து வைக்கிறார்.  கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் நானும்  அமைச்சர் தா.மோ.அன்பரசனும் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து