முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷூ கவரை தலையில் அணிந்திருந்த பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் : வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      இந்தியா
Bihar 2024-10-22

Source: provided

பாட்னா : மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பீகார் சுகாதார துறை அமைச்சர் தலையில் ஷூ கவரை அணிந்திருந்த விவகாரம் குறித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். 

பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே பெகுசராய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த சுகாதார பணியாளர்கள் அமைச்சருக்கு சர்ஜிக்கல் தொப்பியை கொடுப்பதற்கு பதிலாக ஷூ கவரை கொடுத்துள்ளனர். 

அமைச்சரும் அதனை கவனிக்காமல் ஷூ கவரை தலையில் அணிந்துள்ளார். ஷூ கவரை அமைச்சர் அணிந்திருந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

படத்தில் இருப்பவர் பீகாரின் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே. சர்ஜிக்கல் தொப்பிக்கு பதிலாக ஷூ கவரை சுகாதார ஊழியர்கள் அவருக்கு கொடுத்துள்ளனர். அமைச்சரும் எதுவும் தெரியாமல் ஷூ கவரை அணிந்துள்ளார். இப்போது நீங்கள் பீகாரின் சுகாதார அமைப்பை கற்பனை செய்து பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.  இதே போல் நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக வலைதளங்களில் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து